Friday, May 1, 2020

Friday, March 5, 2010

என்னில் என்றும்  நீ . . .




Photobucket

Friday, February 12, 2010

இதயவறை ஓரமெங்கும்
இசையாக ஒலிக்கின்ற
இனியவளின் நினைவுகளே
இயைவாக்கம் அடைந்ததென்னுள்.

வண்ண வண்ண சொல்லெடுத்து
வண்ணக்கவி நான் புனைய
வடிவழகி வந்திடுவாய்
வருடி என்னைவாழ்த்திடுவாய்.

பாடலோடு கூடவந்து
பாசமழை பொழியவல்ல
பாவை உந்தன் பால்முகத்தை
பார்ப்பதற்கு வந்திடுவேன்.

கன்னி உந்தன் கண்ணழகை
கவிச்சிறைக்குள் அடக்கிவைத்து
கவித்துவத்தில் விஞ்சுகின்ற
கவிஞனாக மாறிடுவேன்.

சித்தத்தினைக் கலங்கவைக்கும்
சிணுங்குகின்ற உன்செயலால்
சிந்துகின்ற கண்ணீரெல்லம்
சின்னவளே உன்னை எண்ணியே.

Saturday, August 1, 2009


சிற்பக்கலையும் கட்டிடக்கலையும்
இணைந்து பேசும் இறையாண்மை
தஞ்சை பெரிய கோவில்.

Thursday, July 16, 2009

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது ஏதும் இல்லை .